Home இலங்கை அரசியல் வரி விதிப்புகளால் மட்டும் நாட்டை மீட்க முடியாது

வரி விதிப்புகளால் மட்டும் நாட்டை மீட்க முடியாது

0

வரி விதிப்பதும் சொத்துக்களை விற்பதும் மட்டுமே அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான ஒரே வழி எனில் நாட்டு மக்களால் நிம்மதியாக வாழ முடியாதென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

நிவித்திகல பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்  இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சதியால் வீழ்த்தப்பட்ட அரசாங்கம்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் அபிவிருத்தி செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதுமாத்திரமன்றி, இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்புகளை இழந்ததுடன், வர்த்தகங்களும் பாரியளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக மாயையொன்றை தோற்றுவித்து எமது அரசாங்கம் சதியால் வீழ்த்தப்பட்டது.

இன்று வரிசைகள் ஒழிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற போதிலும், கடவுச்சீட்டு வரிசை தொடர்ந்தும் நீண்டுக்கொண்டே சென்றது.

அதனைக் கட்டுப்படுத்த ஒருபுறம் நடவடிக்கை எடுக்கும்போது, விமான நிலையத்தில் விசாவுக்கு வரிசையொன்று ஏற்பட்டுள்ளது.

மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவில் வரிகளை விதிப்பதால், நாட்டையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். 

 

NO COMMENTS

Exit mobile version