Home இலங்கை அரசியல் உங்கள் வாக்கை வீணடிக்காதீர்கள் : சஜித் விடுத்துள்ள வேண்டுகோள்

உங்கள் வாக்கை வீணடிக்காதீர்கள் : சஜித் விடுத்துள்ள வேண்டுகோள்

0

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகுவார் என்று ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்கவின் கருத்து அமைகின்றது. பச்சை யானை குட்டிகளும், சிவப்பு யானை
குட்டிகளும் இன்று ஒன்றாகச் சேர்ந்து இருக்கின்றன. இதனூடாக ரணில்
விக்ரமசிங்கவுக்கு வெற்றி பெற முடியாது என்பது வெளிப்படையாகியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

எனவே,
உங்கள் வாக்குகளை வீணடிக்காமல் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஐக்கிய மக்கள்
சக்திக்கும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கும் வாக்களிக்குமாறு ஐக்கிய தேசியக்
கட்சிக்காரர்களிடம் வேண்டுகோள் விடுகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ரணில் – அநுர ஒப்பந்தம்

“எவரேனும் ஒருவர் மக்கள் விடுதலை முன்னணிக்கோ, அநுரகுமார திஸாநாயக்கவுக்கோ
வாக்களிப்பார்கள் என்றால், அது திருடர்களைப் பாதுகாக்கின்ற ஜனாதிபதியுடன்
ஒன்றாக இணைந்து செயற்படுகின்ற குழுவுக்கு வழங்குகின்ற வாக்காகும்.

அரச
ஊடகங்களில் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வழங்கப்படுகின்ற அதிக சந்தர்ப்பத்தின்
ஊடாக ரணில் – அநுர ஒப்பந்தம் இன்று உண்மைப்படுத்தப்பட்டு இருக்கின்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு
செய்த 34 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாஸவின் தலைமையில் நேற்று (05) மாலை மினுவாங்கொடையில்
முன்னெடுக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித்
தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சக்தி இந்த நாட்டைக் கட்டியெழுப்பி முன்னேற்றம் அடையச்
செய்யும், இந்த நாட்டில் வீடுகளை அமைக்கும் என்று கூறி, இந்த நாட்டில்
உற்பத்தி தொழிற்சாலைகளை உருவாக்கும் என்று கூறி அச்சத்தில் இருக்கின்றார்கள்.

10 ஆயிரத்து 96 பாடசாலைகளையும் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாக மாற்றும்
என்று பயந்திருக்கின்றார்கள்.

220 இலட்சம் பேரும் ஆட்சியாளர்களாக மாறும் யுகம்
உருவாவதற்கு ரணிலும் அநுரவும் அச்சமடைந்திருக்கின்றார்கள். அதனால் ரணில் –
அநுர ஒப்பந்தம் மிகவும் தெளிவாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இந்த நாட்டில்
உள்ள 220 இலட்சம் மக்களும் முட்டாள்கள் என அவர்கள் நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள்.

எனவே, இந்தத் தந்திரமான அரசியல் சூழ்ச்சிக்குள் சிக்கிக் கொள்ளாமல், இந்த
நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய வகையில் மக்கள் வரத்தை பெற்றுத் தருமாறு
கோரிக்கை விடுக்கின்றேன்.

ரணில் – அநுர கூட்டமைப்புக்குப் புள்ளடியிட்டு வாக்கை வீணடிக்க வேண்டாம்.
ரணில் – அனுர கூட்டமைப்பு தற்போது பிரபல்யமடைந்திருக்கின்றமையால், 220 இலட்சம்
மக்களை வெற்றி பெறச் செய்வதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெறச்
செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version