Home இலங்கை அரசியல் அநுரவுக்கு வாக்களிக்க வேண்டாம்! வடக்கு மக்களிடம் ரணிலின் கோரிக்கை

அநுரவுக்கு வாக்களிக்க வேண்டாம்! வடக்கு மக்களிடம் ரணிலின் கோரிக்கை

0

Courtesy: Sivaa Mayuri

வடக்கில் உள்ள மக்கள், தாம் வாக்களிக்கும் முறையை மாற்ற வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  வலியுறுத்தியுள்ளார்.

தென்னிலங்கை மக்கள் பின்பற்றும் அதே முறையை வடக்கு மக்களும் பின்பற்றுமாறு,   தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க, கூறியிருந்த கருத்து தொடர்பிலேயே  ஜனாதிபதி  இதனை கூறியுள்ளார்.

ரணில் சஜித்துக்கு வாக்களிக்க வேண்டாம்…

2010 இல் சரத் பொன்சேகாவுக்கு நீங்கள் வாக்களித்தீர்கள், தென்னிலங்கை மக்கள் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களித்தார்கள், ஆனால் உங்களுக்கு எதுவும் நடக்கவில்லை, 2015 இல், நீங்கள் மைத்திரிபாலவுக்கு வாக்களித்தீர்கள், தென்னிலங்கை மக்கள் மகிந்த ராஜபக்சவுக்கு  வாக்களித்தார்கள்.

இருப்பினும், உங்களுக்கு எதுவும் ஆகவில்லை. 2019 இல் நீங்கள் சஜித்துக்கு வாக்களித்தீர்கள் ஆனால் தென்னக மக்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்தார்கள். எனினும், கோட்டாபய ராஜபக்ச உங்களை துன்புறுத்தவில்லை.

எனவே இந்த முறையை, இந்த தடவையும் கடைபிடியுங்கள், உங்களுக்கு எதுவும் நடக்காது என்று நான் உத்தரவாதம் தருகிறேன் என்று ரணில் தெரிவித்துள்ளார்.                 

இந்தநிலையில், அநுரகுமார திஸாநாயக்க, தேவையற்ற செல்வாக்கை ஏற்படுத்தியதற்காக வடமாகாண மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்

அத்துடன் சிங்கள மக்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதற்காக மன்னிப்புக் கோர வேண்டும். அதேநேரம் உங்கள் வாக்குரிமையை வீணாக்காதீர்கள், அத்துடன், சஜித்துக்கும் வாக்களிக்க வேண்டாம் என ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டார்.

NO COMMENTS

Exit mobile version