இலங்கையில் அடுத்த ஐந்து வருடங்களுக்கு உயர் ஊதியத்துடனான 10 ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வேலைவாய்ப்புக்கள்..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
குறிப்பாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது நான் அதிக முன்னுரிமை அளித்திருக்கும் விடயங்களில் ஒன்றாகும்.
அதற்கமைய அடுத்த 5 வருடங்களில் 100,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புக்களை உருவாக்குவேன் என நான் ஏற்கனவே அறிவித்திருக்கின்றேன். அவையனைத்தும் உயர் ஊதியம் வழங்கப்படும் வேலைவாய்ப்புக்களாகவே காணப்படும்.
எமது நாடு தனித்துவத் திறமை வாய்ந்த இளைஞர்களைக் கொண்டிருப்பதுடன், நாட்டின் பொருளாதாரத்தின் நிலைமாற்றத்தை முன்னகர்த்திச் செல்வதற்கு அவர்களின் திறமையைப் பயன்படுத்துவதே எனது திட்டமாகும்.
எனது பொருளாதார செயற்றிட்டமானது அதிக வருமானத்தை ஈட்டக்கூடியதும், திறன்மிக்க ஊழியர்களுக்கான உயர் ஊதியத்தை வழங்கக் கூடியதுடமான முக்கிய துறைகளை நவீனமயப்படுத்தல், பொருளாதாரத்தை டிஜிட்டல் மயப்படுத்தல், உயர் பெறுமதியுடைய துறைகளை அபிவிருத்தி செய்தல் ஆகியவற்றை மைப்படுத்தியதாகவே அமைந்திருக்கின்றது.
அது தொழிற்பயிற்சி மற்றும் தொழிற்துறைக் கேள்விக்கு ஏற்றவாறான கல்வித் திட்டம் என்பனவற்றையும் உள்ளடக்கியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.