Home இலங்கை அரசியல் நெருங்கும் சிறிலங்கா அதிபர் தேர்தல்: வாக்கு வேட்டையில் களமிறங்கியுள்ள வேட்பாளர்கள்

நெருங்கும் சிறிலங்கா அதிபர் தேர்தல்: வாக்கு வேட்டையில் களமிறங்கியுள்ள வேட்பாளர்கள்

0

சிறிலங்கா அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வேட்பாளர்களாக களமிறங்க இருப்பவர்கள் இந்த நாட்களில் மக்கள் கருத்துக் கணிப்புகளை ஆரம்பித்துள்ளதாக தெரவிக்கப்படுகிறது.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் நாடளாவிய ரீதியில் தனது கடைசி கருத்து கணிப்புகளை ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரணிலின் தீர்மானம்

இதன் காரணமாக தற்போது புலனாய்வு துறை அதிகாரிகளுகம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் அதிபர் போட்டியிடுவதா வேண்டாமா என்பதை கருத்து கணிப்பு முடிவுகளை கவனமாக ஆராய்ந்த பின்னரே ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தீர்மானிப்பார் எனவும் கூறப்படுகிறது.

கருத்து கணிப்புகள்

அத்துடன், அதிபர் தேர்தல் கருத்துக் கணிப்புகளை நடத்துவதற்காக ஏற்கனவே வேட்பாளர்கள் 2000 கோடிக்கும் அதிகமான பணத்தை செலவிட்டுள்ளதாகவும் நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், எதிர்வரும் அதிபர் தேர்தலுக்காக ஒவ்வொரு அரசியல் கட்சிகளாலும் முறையாக நான்கு கருத்து கணிப்புகள் நடத்தபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version