Courtesy: Sivaa Mayuri
எல்லைகளற்ற செய்தியாளர் அமைப்பினால் வருடாந்தம் வெளியிடப்படும் உலக ஊடக சுதந்திர சுட்டெண் தரவரிசையில் (World Press Freedom Index) 2024 ஆம் ஆண்டு இலங்கை(Sri lanka) 150 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு 180 நாடுகளில் 135 ஆவது இடத்திலிருந்த இலங்கை இந்த வருடம் பதினைந்து இடங்கள் வீழ்ச்சியடைந்து 150 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
பன்முகத்தன்மை இல்லாத மற்றும் முக்கிய அரசியல் குலங்களைச் சார்ந்துள்ள ஊடகத் துறையின் காரணமாக, 22 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நாட்டில் பத்திரிகை இன்னும் ஆபத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: மைத்திரி இரண்டாவது தடவையாக வாக்குமூலம்
ஊடக சுதந்திர தரவரிசைப்படுத்தல்
பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக பணியாற்றுவதற்கும் அறிக்கை செய்வதற்கும் 180 நாடுகள் தரவரிசைப்படுத்தப்படுகின்றன.
இலங்கை தொடர்பில் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த ஊடகத்துறையில் அரசுக்கு சொந்தமான ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
தனியார் துறை ஊடகங்களை பொறுத்தவரையில், முக்கிய ஊடக நிறுவனங்களின் பெரும்பாலான உரிமையாளர்கள் தெளிவான அரசியல் தொடர்புகளைக் கொண்டுள்ளனர்.
இலங்கைச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தவில்லை, எனினும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பிற்கு எவ்வித உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை.
குறிப்பாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் சிறுபான்மையினரின் வாழ்க்கை நிலைமைகளை ஆராய முயற்சிக்கும் ஊடகவியலாளர்களின் வாய்களை அடைத்துவிட அதிகாரிகள் அடிக்கடி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துகின்றனர்.
இணைய ஒழுங்குமுறை சட்டம்
இலங்கையின் நாடாளுமன்றம் 2024 ஜனவரியில் இணைய ஒழுங்குமுறை சட்டத்தை நிறைவேற்றியது, அதன் உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் இணைய பாதுகாப்பு ஆணைக்குழுவை உருவாக்கியது.
அந்த ஆணைக்குழு, தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில், சமூக ஊடகங்களில் கருத்து வேறுபாடு குரல்களின் உள்ளடக்கத்தை தணிக்கை செய்யலாம் மற்றும் அவற்றின் ஆதாரங்களின் ரகசியத்தன்மையை இடைநிறுத்தலாம்.
இலங்கை ஊடகங்கள் முக்கியமாக சிங்கள மற்றும் பௌத்த பெரும்பான்மையினரை கொண்டுள்ளன.
இந்தச் சூழலில், பௌத்த மதம் அல்லது அதன் மதகுருமார்கள் மீதான வெளிப்படையான விமர்சனம் மிகவும் ஆபத்தானது.
அத்துடன் பொதுவாக, தமிழ் அல்லது முஸ்லீம் சிறுபான்மையினர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை மறைக்கும் செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை ஊடக சுதந்திரத்தில் நோர்வே தொடர்ந்தும் முதலிடம் பெற்றுள்ளதுடன் டென்மார்க் 2 ஆம் இடத்திலும், சுவீடன் 3 ஆம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் சீனா 172 ஆம் இடத்திலும் இந்தியா 159 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 152 ஆவது இடத்திலும் கனடா 14 ஆவது இடத்திலும், பிரித்தானியா 23 ஆவது இடத்திலும் மற்றும் அமெரிக்கா 55 ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.
நடு வீதியில் திடீரென பற்றி எரிந்த முச்சக்கரவண்டி
டுபாயிலிருந்து வரும் உத்தரவிற்கு கொழும்பில் செயற்படும் குற்றக்கும்பல்: பொலிஸார் தீவிர விசாரணை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |