Home இலங்கை பொருளாதாரம் சீனாவிடம் இருந்து மில்லியன் டொலர் கடன் பெறும் இலங்கை

சீனாவிடம் இருந்து மில்லியன் டொலர் கடன் பெறும் இலங்கை

0

நீண்ட காலமாக தாமதமாகி வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளை மீண்டும்
தொடங்குவதற்காக, இலங்கை சீன ஏற்றுமதி  -இறக்குமதி வங்கியிடமிருந்து (EXIM) 500
மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான சீன யுவானை கடன் வாங்க உள்ளது.

இதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த வாரம் அமைச்சரவை ஒப்புதலைப்
பெற்றுள்ளார்.

2020 ஆம் ஆண்டு முதல் 

மேலும் திட்டத்தின் முதல் பகுதியை முடிக்க இலங்கை அரசின் நிதியிலிருந்து
கூடுதலாக 438 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தில் 36வீதம் மட்டுமே
நிறைவடைந்துள்ளது.

டொலரிலிருந்து யுவானுக்கு மாற்றப்பட்ட கடன், இலங்கையின் அமெரிக்க டொலர்
இருப்புக்களைக் குறைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version