Home இலங்கை பொருளாதாரம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் வீழ்ச்சி

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் வீழ்ச்சி

0

நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி வேகம் 3.1 அளவில் இருக்கும் என்று நிதியமைச்சின் அதிகாரிகள் எதிர்வு கூறியுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் அரச கணக்குகள் குழுவின் கலந்துரையாடலின் போது குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டின் அரசாங்க வருமானம் மற்றும் ஏனைய விடயங்களைக் கவனத்திற் கொள்ளும்போது இந்த ஆண்டில் பெரும்பாலும் 3.1 வீதம் அளவிலேயே பொருளாதார வளர்ச்சி வீதத்தை எதிர்பார்க்க முடியும் என்று நிதியமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருளாதார வளர்ச்சி 

அரசாங்க கணக்குக் குழுவின் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அதிகாரிகள் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் கடந்த ஆண்டில் பொருளாதார வளர்ச்சி வீதம் 5வீதத்துக்கும் அதிகமான அளவில் பேணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version