Home இலங்கை அரசியல் தமிழர்களைக் கவர 13-ஐ கையிலெடுக்கும் இலங்கையின் தேர்தல் பிரசாரம்

தமிழர்களைக் கவர 13-ஐ கையிலெடுக்கும் இலங்கையின் தேர்தல் பிரசாரம்

0

அரசியலமைப்பின் 13-ஆவது திருத்தத்தை தமது ஆட்சியின் கீழ் நடைமுறைப்படுத்துவதாக கடந்த ஆண்டு நடைப்பெற்ற தேர்தல் மேடைகளில் கூறியதன் பின்னர் அரசியல் தலைவர்களால் அதற்கான நகர்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதே நிதர்சனம்.

வடக்கு – கிழக்கு மக்களை,அரசியல் சங்கீத நாற்காலி விளையாட்டுக்குள் சிக்கவைத்துள்ள தென்னிலங்கை நகர்வுகள் 13-ஆவது திருத்தத்தை அவர்களுக்கான அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் ஆதாயமாகவா பார்க்கின்றனர் என கேள்விகளும் எழுப்பப்படுகிறது.

மேலும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 1987 இல் இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டது, மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பது மற்றும் அதிகாரப் பகிர்வை ஏற்படுத்துவதுவே.

ஆனால் ஜனநாயக மாற்றத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் அதிகாரத்தை பெற்றவுடன் அதனை புறக்கணித்தும் அதில் உள்ள அதிகாரங்களை மூடி மறைத்தும் விளக்கங்களை வழங்குகின்றன.

இவ்வாறான பின்னணியில் மாகாண சபையின் முக்கியத்துவம் தமிழர்களுக்கு எதை பெற்றுக்கொடுக்கும் என்றும், அதன் செயற்பாடுகளால் தமிழர்கள் அடையும் நன்மைகள் தொடர்பிலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளிப்படுத்தும் விடயங்களை தொகுத்து வருகிறது ஐ.பி.சி தமிழின் சக்கர வியூகம் நிகழ்ச்சி…

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்

NO COMMENTS

Exit mobile version