Home இலங்கை அரசியல் இந்திய – பாகிஸ்தான் போர் மூண்டால்..! இலங்கையின் நிலைப்பாடு

இந்திய – பாகிஸ்தான் போர் மூண்டால்..! இலங்கையின் நிலைப்பாடு

0

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டங்கள் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், இலங்கையின் நிலைப்பாட்டை அறிவிக்க எதிர்க்கட்சிகளிடமிருந்து அரசாங்கத்திற்கு பெரும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இந்த நாட்டு மக்கள் அறியத் தகுதியானவர்கள் என நாடாளுமன்ற நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) உறுப்பினரும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிலைப்பாடு

“இலங்கை அமைதியை விரும்பும் நாடு. பிராந்தியத்தில் பதட்டங்கள் போராக அதிகரித்தால் அரசாங்கம் என்ன செய்யும் என்பதை அறிவிக்க வேண்டும்,” என அவர் அதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே முழுமையான போர் ஏற்பட்டால் இலங்கையின் நிலைப்பாடு குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வாவும் வலியுறுத்தியுள்ளார்.

பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்

இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைக் கருத்தில் கொண்டு, இது தொடர்பாக அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் குறித்து நாடாளுமன்றத்திற்கு விளக்கப்பட வேண்டும் என்றும் ஹர்ஷா டி சில்வா (Harsha de Silva) தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version