Home இலங்கை பொருளாதாரம் அமெரிக்காவுக்கான இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் ஏற்படவுள்ள சிக்கல்

அமெரிக்காவுக்கான இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் ஏற்படவுள்ள சிக்கல்

0

இலங்கை, அமெரிக்காவுக்கு, அதிக விலை கொண்ட தேயிலையை ஏற்றுமதி செய்யும்
நிலையில், அண்மையில் அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட வரிகளால் அந்த
ஏற்றுமதிகள் பாதிக்கப்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இலங்கை, அமெரிக்காவுக்கு 6.4 மில்லியன் கிலோ சிலோன் தேயிலையை
ஏற்றுமதி செய்தது.

அதில் 2.2 மில்லியன் கிலோ தேயிலைப் பொதிகள், 1.1 மில்லியன் கிலோ தேயிலைப்
பைகள் மற்றும் 0.84 மில்லியன் கிலோ பச்சை தேயிலை மற்றும் பிற தேயிலைப்
பொதிகள் ஆகியவை அடங்கியிருந்தன.

தேயிலை ஏற்றுமதி

2023 உடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கான, இலங்கையின தேயிலை
ஏற்றுமதி 22 சதவீதம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருந்தது.

வேறு சில சந்தைகளைப் போலவே அமெரிக்க சந்தையும் ஒரு இலங்கையின் தேயிலைக்கு ஒரு
சிறப்பு சந்தையாக அமைந்துள்ளது.

அது, உயர் மற்றும் நடுத்தர வகை சிலோன் தேயிலைக்கு தெளிவான தனித்துவமான
விநியோகஸ்தராக விளங்குகிறது.

NO COMMENTS

Exit mobile version