Home இலங்கை அரசியல் இலங்கை – ஈரானுக்கிடையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கை – ஈரானுக்கிடையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

0

ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தின் சற்று முன்னர் 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs)கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் ஊடாக திரைப்படத் துறை, ஊடகம், சுற்றுலா, கூட்டுறவு, நூலகங்கள், கலாச்சாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பாரிய நீர்ப்பாசன திட்டம்

மகாவலி திட்டத்திற்கு அடுத்தபடியாக இலங்கையின் பாரிய நீர்ப்பாசனத் திட்டமாக வரலாற்றில் இடம்பெறும் “உமா திய ஜனனி” பல்நோக்கு அபிவிருத்தித் திட்ட திறப்பு விழாவிற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Dr. Ebrahim Raisi) இன்று (24) இலங்கை வருகைதந்திருந்தார்.

இதனையடுத்தே குறித்த ஒப்பந்தங்கள் கைச்சாத்தப்பட்டுள்ளன.

இதேவேளை ஈரான் ஜனாதிபதிக்கு கொழும்பில் முப்படையினால் மரியாதை அளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை

இலங்கைக்கு அழைத்த ரணிலுக்கு நன்றி தெரிவித்த ஈரான் ஜனாதிபதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version