உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களின் தாக்கத்தில் இன்று பங்குச்சந்தை வர்த்தகத்தில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏற்றத் தாழ்வுகளுடன் ஆரம்பமாகியுள்ளது எனலாம்.
வங்கி, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளின் பங்குகள் இன்று பங்குச்சந்தையில் கலவையான போக்கை வெளிப்படுத்தியுள்ளன.
புலம்பெயர் தமிழர்கள்
அந்தவகையில், இலங்கையில் பங்குசந்தை தொடர்பில் பலருக்கும் பல சந்தேகங்களும், சவால்களும் உள்ளன.
அதிலும் புலம்பெயர்ந்து நாட்டிலுள்ளவர்கள் பங்குசந்தையில் முதலிடலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து இலங்கையில் முதலீடு செய்பவர்கள் 2 வழிகளில் முதலீடு செய்யலாம் என்றுமுன்னணி பங்குசந்தை நிறுவனத்தின் பணிப்பாளர் ராகேஸ் சர்மா தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இரண்டு வழிகள்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
புலம்பெயர்ந்து சென்றவர்களுக்கு எமது நாட்டிலுள்ள வங்கிகள் மற்றும் கம்பனிகளின் நிலவரம் தெரியவருவதால் அவர்கள் எமது நாட்டிலே முதலீடு செய்வது நல்லது.
அவர்கள் local individual மற்றும் Forign individual என்ற இருவழிகளினூடாக இலங்கையில் முதலீடு செய்ய முடியும்.
அதற்கான ஒரு கணக்கை ஆரம்பித்து இதனை ஆரம்பிக்கலாம்.
இலங்கையிலுள்ள வங்கி புலம்பெயர்நாடுகளில் இருக்கலாம். அங்கு சென்று கணக்கை ஆரம்பிக்கலாம்.
மேலும், அவர்களின் உறவினர்கள் இலங்கையில் இருந்தால் அவர்கள் பெயரில் கணக்கை ஆரம்பிக்கலாம் என்றார்.
