Home இலங்கை அரசியல் தமிழரசுக்கட்சியுடன் கைகோர்த்த பின்னணி! மணிவண்ணன் வெளிப்படை

தமிழரசுக்கட்சியுடன் கைகோர்த்த பின்னணி! மணிவண்ணன் வெளிப்படை

0

இன்று ஜனநாயக வழியில் திரும்பியிருக்க கூடிய கட்சிகள் யுத்தக்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான சக்திகளுடனும், அமைப்புகளுடனும் இருந்துள்ளார்கள் என்று
யாழ் மாநகரசபையினுடைய முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

ஐபிசி தமிழினுடைய சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“உள்ளூராட்சிமன்ற தேர்தல்களின் அடிப்படையில் ஆட்சியை கைப்பற்ற வேண்டிய நோக்கில் ஒவ்வொரு அணிகளும் கூட்டணி அமைத்துக்கொண்டுள்ளார்கள்.

என்னைபொறுத்தவரையில் இந்த கூட்டணிகள் உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சயிமைப்பதற்கான வெறும் கூட்டு மட்டும் தான்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் 6 ஆசனங்களும் தமிழரசுக்கட்சியிடம் 7ஆசனங்களும் இருந்த நிலையில் இந்த 2 அணிகள் சேர்ந்தாலே 11 ஆசனங்களை பெற முடியும் எனவே இந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் எங்களுடைய கூட்டணி அமைந்துள்ளது.

அதற்கமைய முதலிரண்டு ஆண்டுகளுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அடுத்த 2 ஆண்டுகளுக்கு தமிழரசுக்கட்சியும் ஆட்சியமைப்பதாக முடிவெடுத்துள்ளோம்” என குறிப்பிட்டார்.

முழுமையான விபரங்களை கீழுள்ள காணொளியில் காண்க..

NO COMMENTS

Exit mobile version