இலங்கை (srilanka) மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலியில் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.
போட்டியில் சற்று முன்னர் வரை இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில், இன்றைய முதல் நாள் ஆட்டத்தின் போது இலங்கையின் சகலதுறை வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் (Angelo Mathews) உபாதைக்குள்ளாகியுள்ளார்.
முதற்கட்ட சிகிச்சைகள்
ஆட்டத்தின் 22 ஆவது ஓவரில் வில்லியம் ஓ ரூர்க் வீசிய பந்து மெத்தியூஸின் வலது கை ஆள்காட்டி விரலில் தாக்கியது.
பின்னர், பிசியோ அழைக்கப்பட்டு அவருக்கு முதற்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
அதையடுத்து தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடிய மெத்தியூஸ், 24 ஆவது ஓவரில் 12 ஓட்டங்களுடன் ஓய்வு பெற்றார்.
அவர் மீண்டும் பேட் செய்யத் தகுதியானவர் என மதிப்பிடப்பட்டுள்ளார், எலும்பு முறிவு ஏதுமின்றி சிறிய வீக்கம் மாத்திரம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
