தேர்தல் சட்டங்களை மீறிய வகையில் தனது புகைப்படத்தினையும் வேறு ஒரு ஜனாதிபதி
வேட்பாளரின் புகைப்படத்தினையும் இணைத்து செய்திகள் வெளியிடப்பட்டமை தொடர்பில்
ஜனாதிபதி வேட்பாளர் திலகராஜ் முறைப்பாடு செய்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் முறைப்பாடு பிரிவிலேயே அவர் முறைப்பாடுசெய்துள்ளார்.
ஏற்க மறுத்த முறைப்பாடு
எனினும், குறித்த முறைப்பாட்டை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்
முறைப்பாடு பிரிவு பொறுப்பெடுக்கவில்லையென ஜனாதிபதி வேட்பாளர் திலகராஜ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த நாட்டில் மலையக மக்களின் உரிமையினை வெளிப்படுத்தும் வகையில் தனக்கு
வாக்களிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
