இலங்கை 16 ஆண்டுகளுக்குப் பிறகு கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
தாய்லாந்தில் இன்று (5) நடைபெற்ற சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் புருனே அணியை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்ததன் மூலம் இது நிகழ்ந்தது.
போட்டியின் முதல் பாதியில் கோல் அடிக்கப்படவில்லை
போட்டியின் முதல் பாதியில் எந்த அணியும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
போட்டியின் 57வது நிமிடத்தில் இலங்கைக்கான வெற்றி கோலை லியோன் பெரேரா அடித்தார்.
சர்வதேச கால்பந்து தரவரிசையில் இலங்கை தற்போது 200வது இடத்தில் உள்ளது.
அந்தப் பட்டியலில் புருனே அணி இலங்கையை விட 15 இடங்கள் முன்னிலையில் உள்ளது. அதாவது, 185வது இடத்தில் உள்ளது.
16 ஆண்டுக்கு முன் கிடைத்த வெற்றி
இலங்கை கடைசியாக 2009 ஆம் ஆண்டு புருனே அணியை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
