அண்மைய நாட்களில் வடக்கு தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் திட்டம் பாரிய சர்ச்சைக்குள்ளான நிலையில் இது நிறுப்படுத்தப்படும் என அரச தரப்பு வழங்கிய வாக்குறுதி
ஒரு வாரம் கடந்த நிலையில் காற்றில் பறக்கிறது என்பதே நிதர்சனம்.
மக்களின் போராட்ட மனநிலையை மடைமாற்றி தமது திட்டத்தை வலுகவனமாக செயற்படுத்துவதற்கான ஒரு காலமாகவே இந்த ஒருவார்த்தை பயன்படுத்தியிருக்கிறது அரசு.
அரச தரப்பு ஒரு வலுவான காரணம் இல்லாமல் மேற்கொள்ளும் இந்த சுவீகரிப்புத் திட்டம் வடக்கில் ஒரு சிங்கள குடியேற்றத்திற்கான முனைப்பாகவோ அல்லது இந்தியா சீனா போன்ற நாடுகளுக்கு தாரைவார்க்கும் ஒரு திட்டமாக இருக்கலாம் என்பதே இப்போதையை சந்தேகமாகும்.
இந்த விவகாரத்தில் அரசு மறைத்து வைத்து நகர்த்தும் காய்கள் தொடர்பாகவும் இதன் பிண்ண்ணியில் வடக்கு தமிழ்ச்சமூகம் எதிர்கொள்ளப்போகும் பேராபத்து தொடர்பிலும் ஆராய்கிறது இன்றைய அதிர்வு.
