Home விளையாட்டு தொடர் வெற்றிகளை பதிவு செய்த இலங்கை மகளிர் அணி

தொடர் வெற்றிகளை பதிவு செய்த இலங்கை மகளிர் அணி

0

மேற்கிந்திய தீவுகள் (West Indies) அணிக்கு எதிரான இன்றைய ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை (Sri lanka) மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி, 3 போட்டிகள் கொண்ட இந்தப் தொடரில் 02 இற்கு 0 என்ற கணக்கில் இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி 31 ஓவர்கள் நிறைவில் 92 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை மகளிர் அணி 

பந்துவீச்சில் இலங்கை மகளிர் அணி சார்பில் கவீஷா தில்ஹாரி (Kaweesha Dilhari) 04 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் களம் இறங்கிய இலங்கை மகளிர் அணி 21 ஓவர்கள் 2 பந்துகளின் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 93 ஓட்டங்களை எடுத்து இலங்கை அணி வெற்றி பெற்றது.

அதில், இலங்கை மகளிர் அணி சார்பாக விஷ்மி குணரத்ன (Vishmi Gunaratne) அரைசதம் அடித்தார்.

இதில் அபாரமான சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரிகள் அடங்கும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டி ஜூன் 21ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் (Hambantota) நடைபெறவுள்ளது.

Source: https://ibctamil.com/article/sri-lanka-women-s-national-cricket-team-win-2024-1718703502

NO COMMENTS

Exit mobile version