Home இலங்கை குற்றம் இலங்கை வந்த விமானத்தில் வன்முறையில் ஈடுபட்டவருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

இலங்கை வந்த விமானத்தில் வன்முறையில் ஈடுபட்டவருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

0

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் விமானப் பணிப்பெண்ணைத் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் சவுதி நாட்டவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 03 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் மூன்று மாத சிறைத்தண்டனை விதித்த கொழும்பு தலைமை நீதவான் அசங்கா எஸ். போதரகம தண்டனையை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைத்துள்ளார்.

சந்தேக நபர் மீது, தாக்குதல் நடத்தியமை, காயத்தை ஏற்படுத்துதல் மற்றும் மிரட்டுதல் உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளை விமான நிலைய பொலிஸாரால் சுமத்தப்பட்டன.

சிறைத்தண்டனைக்கு மேலதிமகாக அபராதம்

சிறைத்தண்டனைக்கு மேலதிமகாக 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் இந்தத் தாக்குதல் நடந்ததாக சம்பவம் குறித்த தகவல்களை முன்வைத்த விமான நிலைய பொலிஸார், நீதிமன்றத்தில் முன்வைத்தனர்.

விமானம் தரையிறங்க தயாராகும் போது அனைத்து பயணிகளையும் சீட் பெல்ட்களை அகற்றுமாறு விமானப் பணிப்பெண் அறிவுறுத்தியதாகவும், ஆனால் சந்தேக நபர் அறிவுறுத்தலை புறக்கணித்துள்ளார்.

ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அவரை உடல் ரீதியாகத் தாக்கத் தொடங்கியதாகவும் விசாரணை அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்

NO COMMENTS

Exit mobile version