Home இலங்கை பொருளாதாரம் இந்த ஆண்டுக்குள் செயற்பட தயாராகும் தேசிய விமான சேவை

இந்த ஆண்டுக்குள் செயற்பட தயாராகும் தேசிய விமான சேவை

0

Courtesy: Sivaa Mayuri

தேசிய விமான நிறுவனமான ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் (Sri Lankan Airlines), இந்த ஆண்டு இறுதிக்குள் அதன் முழு விமான சேவையையும் செயற்படுத்தும் என்று விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது மூன்று ஏர்பஸ் ஏ320 விமானங்கள் இயந்திரங்கள் கிடைக்காததால் நிறுவனம் சேவையில் ஈடுபடுவதில்லை என்பது தெரியவந்துள்ளது.

தற்போது குறித்த இயந்திரங்கள் பழுதுபார்க்கப்பட்டு வருகின்றன.

விமானங்களின் எண்ணிக்கையில் உயர்வு

இதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையான விமானங்களின் சேவையை செயற்படுத்த எதிர்பார்ப்பதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், அடுத்த ஆண்டு இறுதிக்குள், ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம், தமது விமானங்களை 27 விமானங்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version