Home இலங்கை அரசியல் ரஷ்யாவில் இலங்கை இராணுவம் தொடர்பில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அளித்துள்ள உறுதி

ரஷ்யாவில் இலங்கை இராணுவம் தொடர்பில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அளித்துள்ள உறுதி

0

ரஷ்யாவில் (Russia) இனி இலங்கையர்கள் இராணுவ சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டார்கள் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergey Lavrov) இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் (Ali Sabry) உறுதியளித்துள்ளார்.  

ரஷ்யாவிற்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சா் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கருத்துகளை பரிமாறிக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவில் மண் கௌவிய நெதனியாகு!! உடைந்தது இஸ்ரேலின் போர் அமைச்சரவை!!

ரஷ்யாவில் இலங்கை இராணுவம்

அத்துடன், ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி, ரஷ்ய வெளிவிவகார அமைச்சரை இதில் தலையிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் ஜூன் 26 மற்றும் 27ஆம் திகதிகளில், இலங்கையின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு ரஷ்ய அதிகாரிகளுடன் இந்தப் பிரச்சினையை விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இலங்கை வெளிநாட்டுக் கொள்கைகள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ரணில் விளக்கம்: கடுமையாக விமர்சிக்கும் கர்தினால்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version