Home உலகம் இஸ்ரேல் – காசா போர் நிறுத்த திட்டம் : அமெரிக்காவின் முன்மொழிவிற்கு ஐ.நா ஆதரவு

இஸ்ரேல் – காசா போர் நிறுத்த திட்டம் : அமெரிக்காவின் முன்மொழிவிற்கு ஐ.நா ஆதரவு

0

இஸ்ரேல் (Israel) காசா (Gaza) போர்நிறுத்தத் திட்டத்தை ஆதரிக்கும் அமெரிக்காவின் (America) முன்மொழிவுக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவை ஆதரவாக வாக்களித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தோடு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையில் உள்ள 15 உறுப்பினர்களில் 14 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதுடன் ரஷ்யா (Russia) வாக்களிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான போர் நிறுத்தம், ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவித்தல் மற்றும் உயிரிழந்த பணயக் கைதிகளின் உடல்களை மீளப் பெறுதல் போன்ற விடயங்களை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது.

ஆலங்கட்டி மழையால் நடு வானில் பயணித்த விமானம் சேதம்

நிரந்தர போர்நிறுத்தம் 

இஸ்ரேலியர்கள் குறித்த திட்டத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) தெரிவித்திருந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) அமெரிக்க முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எவ்வாறாயினும் நிரந்தர போர்நிறுத்தம் மற்றும் காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் முழுவதுமாக வெளியேறுவதற்கான உத்தரவாதத்தை ஹமாஸ் (Hamas)  கோருவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவை அறிக்கையின் ஊடாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் போட்டியிடாமல் நிதியமைச்சரான நிர்மலா: ஜெய்சங்கருக்கு கிடைத்த பதவி

இஸ்ரேலை விட்டு விலகாத ஆபத்துக்கள்: எந்த நேரமும் வெடித்துச் சிதறக்கூடிய எரிமலையின் உச்சத்தில் இஸ்ரேல்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!       

NO COMMENTS

Exit mobile version