Home உலகம் வெளிநாடொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ள இலங்கையர் : வெளியான காரணம்

வெளிநாடொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ள இலங்கையர் : வெளியான காரணம்

0

இத்தாலியில் (Italy) இலங்கையை (Sri Lanka) சேர்ந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரோம் (Rome) நகரில் பணிபுரியும் இலங்கைப் பெண்ணை கடந்த 26 ஆம் திகதி கத்தியால் குத்தி பலத்த காயப்படுத்திய கணவனின் சடலமே இவ்வாறு மீடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், குறித்த நபர் வசித்த வீட்டின் விட்டத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

கத்தியால் குத்திய கணவர்

மனைவியை பலமுறை கத்தியால் குத்திய கணவர், பின்னர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/sri-lankan-body-recovered-in-italy-1719556398

NO COMMENTS

Exit mobile version