Home இலங்கை சமூகம் இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டார பிணையில் விடுவிப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டார பிணையில் விடுவிப்பு

0

இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டார(Ashen Bandara) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பிலியந்தலை காவல் நிலையத்திற்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து நேற்று(08.03.2025) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டார பிலியந்தலை, கொல்லமுன்ன பகுதியில் வசிக்கும் நிலையில், நபரொருவரின் வீடொன்றிற்குள் நுழைந்து மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறை விசாரணை

கைது செய்யப்பட்ட அஷேன் பண்டாரவின் வீட்டிற்கு அருகாமையில் உள்ளவருடன், வீதியை மறித்து கார் நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டு, எதிர்வரும் 12 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

NO COMMENTS

Exit mobile version