Home இலங்கை அரசியல் தேசபந்து விவகாரம் : அம்பலமான டிரான் – அநுர டீல்

தேசபந்து விவகாரம் : அம்பலமான டிரான் – அநுர டீல்

0

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) அதற்கு எதிராக கொழும்பு உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் (Nalinda Jayatissa) ஜனாதிபதி அநுர மற்றும் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் இருவருக்கும் இடையில் இருக்கும் டீல் தேசபந்த தென்னகோனின் கைதை தடுக்கின்றதா என ஒரு ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன் டிரான் அலஸின் (Tiran Alles) வீட்டில் தேடுதல் நடத்தப்பட்டதா சோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் இருக்கின்றதா என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போது ஒரு அமைச்சர் பொறுப்பற்ற விதத்தில் தனக்கு தெரியாது என பதிலளித்துள்ளார்.

மேலும் உங்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் காவல்துறையினருக்கு வழங்குங்கள் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வந்தியை கைது செய்தால் கூட உங்களுக்கு பரிசுத்தொகை கிடைக்கும் ஆனால் தேசபந்து தென்னகோனை கைது செய்தால் உங்களுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை என சொல்லும் விதமாக நலிந்த ஜயதிஸ்ஸ பதிலளித்துள்ளார்.

இதேவேளை தேசபந்துவை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் ஒரு வாரத்திற்கு முன்னர் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பியதாக ஊடகவியலாளர் கேள்வியெழுப்பிய போதும் நலிந்த ஜயதிஸ்ஸ தனக்கு தெரியாது என சாதாரணமாக பதிலளித்துள்ளார்.

இது தொடர்பான மேலும் பல விடயங்களை இன்றைய ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காண்க….. 

https://www.youtube.com/embed/b3sip5QhqTQ

NO COMMENTS

Exit mobile version