Home இலங்கை அரசியல் கனேடிய உயர்ஸ்தானிகரை வரவழைத்த இலங்கை அரசாங்கம்: காரணம் தொடர்பில் வெளியான தகவல்

கனேடிய உயர்ஸ்தானிகரை வரவழைத்த இலங்கை அரசாங்கம்: காரணம் தொடர்பில் வெளியான தகவல்

0

கனடாவின் பிராம்ப்டன் நகரில் இலங்கையின் தமிழ் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைவுச்சின்னம் அமைக்கும் திட்டம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகரை வரவழைத்ததாக கூறப்படுகிறது.

தமிழ் இனப்படுகொலை நினைவிடத்திற்கான இறுதி வடிவமைப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிராம்ப்டன் நகர சபையால் அங்கீகரிக்கப்பட்டது.

லண்டன் வாழ் தமிழர்களுக்கு எச்சரிக்கை! 25000 பவுண்ட் இழந்த பெண்

இனப்படுகொலையில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தகர்க்கப்பட்டதன் பின்னரே பிரம்டனில் நினைவுச்சின்னம் கட்டப்பட்டது.

வெளிப்படுத்தப்பட்ட தீவிர கவலை

இலங்கைத் தமிழர்களின் தனித்துவ பிரச்சினைகளை வெளிப்படுத்தும் ஒரு புத்தகம்

இந்த நிலையில், இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவுச்சின்னம் பற்றிய செய்தி இலங்கை அதிகாரிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்தே வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, இலங்கையின் “தீவிர கவலையை” தெரிவிக்க, கொழும்பில் உள்ள ஒட்டாவாவின் தூதரை வரவழைத்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியல் தீர்வுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வருவார்கள் : நம்பிக்கை தெரிவித்த சிறீரங்கேஸ்வரன்

இதன்போது, முன்மொழியப்பட்ட நினைவுச்சின்னம் குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சகம் தனது “வலுவான கவலையை” வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் வகையில், மே 18 அன்று தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: வேட்பாளர்களின் எண்ணிக்கையில் முதல்முறை ஏற்பட்ட மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version