Home இலங்கை மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் இலங்கை அரசு தோல்வி : ஐ.நா மனித உரிமைகள்ஆணையாளர் அறிக்கை

மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் இலங்கை அரசு தோல்வி : ஐ.நா மனித உரிமைகள்ஆணையாளர் அறிக்கை

0

இலங்கையில்(sri lanka) பாதிக்கப்பட்டவரின் துன்பங்களைத் திட்டவட்டமான விதத்தில் அங்கீகரித்தல், பாரதூரமான உரிமைகள் மீறல்களை நிகழ்த்தியதில் இராணுவம் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினரின் வகிபங்கினை ஏற்றுக் கொள்ளல், கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் நிகழ்த்தப்பட்டிருக்கும் அத்துமீறல்களைக் கவனத்திலெடுத்தல் ஆகிய விடயங்களில் இலங்கை அரசு தோல்வி கண்டுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 51/1 க்கு இணங்க சமர்ப்பிக்கப்பட்ட தற்போதைய அறிக்கையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை பற்றி வெளியிட்ட விரிவான அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மனித உரிமை மீறல்

இலங்கையில் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள். கடந்த கால மற்றும் தற்போதைய மனித உரிமை மீறல்களுக்கான தண்டனையின்மை மற்றும் நிர்வாகத்தில் பொறுப்புக்கூறலுக்கான பரந்த கோரிக்கைகளுக்கு இடையிலான தொடர்பைக் குறிப்பிட்டு, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை மற்றும் சர்வதேச சமூகம் ஆகிய இரு நாடுகளின் நடவடிக்கைக்கான பரிந்துரைகளை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

பல கட்டமைப்புகளுடன் இணைந்த விதத்தில் பாரிய குற்றச்செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் என்பன தொடர்பாக நம்பகமான விதத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் அரச இயந்திரத்தின் ஒரு சில உறுப்பினர்களும் இன்னமும் இருந்து வருகிறார்கள்.

இது பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகள் மீறல்களைத் தொடர்ந்து தக்க வைத்தல் என்பவற்றின் அடிப்படையில் அர்த்தபூர்வமான முன்னேற்றம் ஏற்படுவதனை தடுத்து வருகின்றது.

பொருளாதார நெருக்கடிக்கு பங்களிப்பு

51 வது மனித உரிமைகள் பேரவை அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டவாறு, ஆழமாக வேரூன்றியிருக்கும் தண்டனை விலக்குரிமையின் விளைவாக ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தோன்றியிருந்ததுடன், அது நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு பங்களிப்பு செய்திருந்தது.

அந்நெருக்கடி 2022 இல் பொதுமக்கள் போராட்டங்களைத் தூண்டியது. என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் தமிழ் வடிவம் முழுமையாக வருமாறு, 

NO COMMENTS

Exit mobile version