Home முக்கியச் செய்திகள் இலங்கை வைத்தியசாலைகளில் தொடரும் அசமந்த போக்கு : சிறுவனுக்கு நேர்ந்த அநீதி

இலங்கை வைத்தியசாலைகளில் தொடரும் அசமந்த போக்கு : சிறுவனுக்கு நேர்ந்த அநீதி

0

இலங்கையில் (Sri Lanka) தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு சிகிச்சை பெற சென்ற சிறுவனை வைத்தியர்கள் பல மணி நேரம் காக்க வைத்ததாக குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது மாத்தறை (Matara) கிளையிலுள்ள தனியார் வைத்தியாசலையொன்றில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், சிறுவனுக்கு கையில் ஏற்பட்ட முறிவிற்கு சிகிச்சை பெற குறித்த தனியார் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

நேர்ந்த அநியாயம்

அங்கு அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சைக்காக  4000 ரூபாய் கட்டணமும் செலுத்தப்பட்டுள்ளது.  

இந்தநிலையில். சிறுவனை காத்திருக்குமாறு கோரி நான்கு மணித்தியாலங்கள் கடந்தும் வைத்தியர் யாரும் சிகிச்சையளிக்க வராததால் சிறுவரின் தந்தை வைத்தியசாலை நிர்வாகத்திடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதையடுத்து, சிறுவனின் தந்தை தான் செலுத்திய 4000 ரூபாவையும் மற்றும் எக்ஸ்ரே அறிக்கையையும் திரும்ப தருமாறு கோரி அதனை நேரலையாக முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அத்தோடு, தனக்கு இரண்டாவது முறையாக இதே வைத்தியசாலையில் இவ்வாறு ஒரு சம்பவம் நடைபெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/QE85AHwH4Wc

NO COMMENTS

Exit mobile version