இலங்கை (sri lanka)கடற்பகுதிக்குள் தமது கொடியுடனான டொக்டர் பிரிட்ஜோவ் நான்சன் என்ற ஆய்வுக் கப்பலை அனுமதிக்குமாறு ஐ.நா (un)அனுப்பிய கடிதத்திற்கு அநுர அரசு பதிலளிக்வில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூன் 12ஆம் திகதி குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கை கடல் எல்லைக்குள் ஐ.நா. கொடியின் கீழ் ஒரு ஆய்வுக் கப்பலை அனுப்ப அனுமதிப்பது குறித்து பரிசீலிக்குமாறு வேண்டுகோள் விடுத்து ஐ.நாவின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பு பணியகம், கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.
இரத்து செய்யப்பட்ட ஆய்வுக்கப்பலின் பயணம்
இது தொடர்பாக கலந்துரையாடவும், தேவையான தகவல்களை வழங்கவும் விரைவில் ஒரு சந்திப்பை நடத்த ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் தயாராக இருக்கிறார் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
எனினும் இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்த கடிதத்திற்கான பதிலை அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனால், ஐ.நா ஆய்வுக் கப்பலின் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
