Home இலங்கை சமூகம் லெபனானுக்கு செல்லும் இலங்கை தொழிலாளர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

லெபனானுக்கு செல்லும் இலங்கை தொழிலாளர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

0

வேலைக்காக லெபனானுக்கு செல்லும் இலங்கைத் தொழிலாளர்களின் பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

லெபனானில் நிலவும் பதற்ற நிலை முடிவுக்கு கொண்டு வரப்படும் வரை அந்த நாட்டுக்கான பணியாளர்கள் பதிவு செய்யப்பட மாட்டார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் பிரியந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, லெபனானுக்கு விஜயம் செய்யும் இலங்கையர்களுக்கு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தொடர்ச்சியான அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது.

லெபனானில் வசிக்கும் இலங்கையர்கள்

சுமார் 7,400 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் காரணமாக தற்போது லெபனானில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/sri-lankan-migrantion-to-lebanon-will-be-stopped-1730571848

NO COMMENTS

Exit mobile version