Home இலங்கை சமூகம் வெளிநாட்டில் காணாமல் போன இலங்கை பெண்: 29 வருடங்களின் பின்னர் நடந்த அதிசயம்

வெளிநாட்டில் காணாமல் போன இலங்கை பெண்: 29 வருடங்களின் பின்னர் நடந்த அதிசயம்

0

வெளிநாடு சென்ற நிலையில் பல வருடங்களாக காணாமல் போன பெண் மீண்டும் வீட்டுக்கு வந்த சம்பவம் பதிவாகி உள்ளது.

சவூதி அரேபியாவில் 29 வருடங்களாக வீட்டுப் பணிப் பெண்ணாக பணியாற்றிய பெண், மீண்டும் வீடு திரும்பிய சம்பவம் வெயங்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வெளிநாடு செல்லும் போது அவரது மகனுக்கு 13 வயதும், மகளுக்கு 12 வயதுமாக இருந்த நிலையில் தற்போது அவர்களுக்கு 43 மற்றும் 42 வயதாக அதிகரித்துள்ளது.

காணாமல் போன பெண்

வாரியபொல – ஹிந்தகஹவெவ பிரதேசத்தை சேர்ந்த கமலாவதி என்ற இந்த தாயார் 1995 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காக சென்றுள்ளார்.

ஆறு மாதங்களாகக் கடிதங்கள் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் கணவனுடனும் பிள்ளைகளுடனும் தொடர்பில் இருந்த கமலாவதியின் அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டது.


வெளிநாட்டு வேலைவாய்ப்பு

தனது மனைவிக்கு என்ன நடந்தது என்பதை அறிய பல சந்தர்ப்பங்களில் அவரது கணவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சென்ற போதிலும், அவர் அவரைப் பற்றிய எந்தத் தகவலையும் பெற முடியவில்லை.

இந்நிலையில் 2009ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் 29 வருடங்களின் பின்னர் இலங்கை வந்த அவர், விமான நிலையத்தில் உள்ள உதவி பிரிவின் உதவியுடன் வெயாங்கொடயிலுள்ள பிள்ளைகளின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version