Home இலங்கை அரசியல் சீனாவின் வங்கி அதிகாரிகளை சந்திக்கும் இலங்கை அதிகாரிகள்

சீனாவின் வங்கி அதிகாரிகளை சந்திக்கும் இலங்கை அதிகாரிகள்

0

மத்திய அதிவேக வீதி கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்து விவாதிக்க
இலங்கை அதிகாரிகள் சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் (எக்ஸிம் வங்கி)
பிரதிநிதிகளைச் சந்திக்க உள்ளனர்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனை
தெரிவித்துள்ளார்.

கட்டுமான பணிகள் 

அண்மைய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க தாமதங்களைச் சந்தித்த, இந்த திட்டத்தின்
முதல் கட்டத்தை மீண்டும் தொடங்குவதே இந்த சந்திப்பின் நோக்கமாகும்.

சுமார் 122 பில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்ட மத்திய அதிவேக வீதி
கட்டுமான நிறுவனங்கள், தமது பணிகளை கைவிட்டதால், கட்டுமான பணிகள்
முடங்கியுள்ளன.

முதல் கட்டத்திற்கான கடன் ஒப்பந்தம், 989 மில்லியன் டொலர்கள் மதிப்பிலானது,

இது, 2019 மார்ச்சில் கையெழுத்தானது, கட்டுமானப் பணிகள் 2020 செப்டம்பரில்
ஆரம்பிக்கப்பட்டன.

இருப்பினும், இலங்கை அதன் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால், இந்தத்
திட்டம் நிறுத்தப்பட்டது என கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version