Home இலங்கை அரசியல் வடக்கில் இராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் நிலங்கள் : ஜனாதிபதி அநுர வழங்கிய உறுதி

வடக்கில் இராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் நிலங்கள் : ஜனாதிபதி அநுர வழங்கிய உறுதி

0

இராணுவத்தின் வசம் உள்ள வடக்குப் பகுதி தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் (Jaffna) – வல்வெட்டித்துறையில் (Valvettithurai) நேற்று (31.01.2025) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

1980 களில் இருந்து ஆயுதப் போராட்டத்தின் போது, இராணுவத் தேவைகளுக்காக அரசாங்கம் தொடர்ச்சியாக மக்களின் நிலங்களை அபகரித்து வந்தது.

உயர் பாதுகாப்பு வலயம்

குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம் நகரில் பலாலி இராணுவத் தளத்தைச் சுற்றி உயர் பாதுகாப்பு வலயத்தை உருவாக்குவதற்காக தமிழர்களுக்கு சொந்தமான சுமார் 3,500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், வடக்குப் பகுதி தமிழர்களிடம் இருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்கள் விரைவில் திரும்ப ஒப்படைக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதுடன், இதற்கான செயல்முறை விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுர இதன்போது குறிப்பிட்டுள்ளார். 

மேலும், இனவாதத்தை பரப்புவோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/yojOTCfSkb8

NO COMMENTS

Exit mobile version