Home இலங்கை அரசியல் ஜனாதிபதியை தெரிவு செய்யும் முறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதியை தெரிவு செய்யும் முறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

0

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை ஊகிக்க முடியாத நிலையில் அரசியல் தலைமைகள் குழப்பி வருகின்றன.

இந்நிலையில் ஜனாதிபதியை தெரிவு செய்யும் முறை தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் எவராலும் 50 வீதத்துக்கும் அதிகமான பெரும்பான்மையைப் பெற முடியாவிட்டால், இரண்டாவது விருப்பு வாக்கின் அடிப்படையில் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வேட்பாளர்

இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் உயிரிழந்திருந்தால், அந்த அரசியல் கட்சி அல்லது குழுவிலிருந்து வேறு ஒருவரை அந்த சின்னத்தின் கீழ் நியமிக்க வாய்ப்பு உள்ளதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.


வாக்குச்சீட்டு

வேறு ஒரு வேட்பாளர் பரிந்துரைக்கப்பட்டாலும் வாக்குச் சீட்டில் மாற்றம் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர், முந்தைய வேட்பாளரின் (இறந்த வேட்பாளர்) பெயரில் போட்டியிட வேண்டும் என்று ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version