உலகளாவிய ரீதியில் வளர்ந்து வரும் நாடுகளில் வலுவான நாணயமாக இலங்கை ரூபாய் (Sri Lanka Rupee) முதலிடத்தை பெற்றுள்ளது.
இந்த விடயம் உலக புகழ்பெற்ற புளூம்பெர்க் (Bloomberg) சஞ்சிகை தரவுகளுக்கமைய தெரியவந்துள்ளது.
அத்துடன், ப்ளூம்பெர்க் தரவுகளுக்கமைய பாகிஸ்தான் ரூபாய் மற்றும் ரஷ்ய ரூபிள் ஆகியவை வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரூபாவின் பெறுமதி
இதேவேளை, கடந்த ஆறு மாதங்களில் டொலருக்கு (dollar) நிகரான ரூபாவின் பெறுமதி 7.3% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஜனவரி முதல் ஏப்ரல் வரை ரூபாயின் மதிப்பு சடுதியாக அதிகரித்து காணப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மே மாதத்தில் மாத்திரம் ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதாக மத்திய வங்கி (central bank of srilanka) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.