Home இலங்கை பொருளாதாரம் 470 ரூபாவாக உயரப் போகும் டொலரின் பெறுமதி! விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

470 ரூபாவாக உயரப் போகும் டொலரின் பெறுமதி! விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

0

தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவு திட்ட இடைவெளி 400 மில்லியன் ரூபாயாகக் காணப்படுகிறது. அதனை செயற்படுத்தினால் டொலரின் பெறுமதி 470 ரூபாய் வரையில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

கெஸ்பேவவில் இன்று (12) பிற்பகல் இடம்பெற்ற “ரணிலால் முடியும்” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி  மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

டொலரின் பெறுமதி உயரும்…

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இனிவரும் காலங்களில் இயலும் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் வாழ்க்கைச் சுமையைக் குறைத்து, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவோம். புதிய முதலீடுகளை கொண்டு வருவோம். மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களை வழங்குவோம்.

முன்னாள் விவசாய அமைச்சர் அநுரகுமார திசாநாயக்கவும் சஜித்தும் என்ன சொல்கிறார்கள்? அவர்கள் எம்மோடு தொடர்புபடவில்லை என்கின்றனர். எம்மை விரட்டிவிட்டு அதிகாரத்தை அவர்களிடம் தருமாறு கேட்கிறார்கள்.

அவர்களுக்கு வாக்களிப்பதால் என்ன நடக்கும்? ரூபாயின் பெறுமதி 420 வரையில் அதிகரிக்கும். 370 அதிகரிப்பை தாங்க முடியாத மக்களால் 420 ஐ தாங்க முடியுமா?

தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவு திட்ட இடைவெளி 400 மில்லியன் ரூபாயாகக் காணப்படுகிறது. அதனை செயற்படுத்தினால் டொலரின் பெறுமதி 470 ரூபாய் வரையில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால் சர்வதேச நாணய நிதியம் உடன்படிக்கைகளிலிருந்து விலகிச் செல்லும்.

எம்மைத் திருடர்கள் என்று சொல்பவர்கள். எதற்காக மக்களிடம் பொய் சொல்கிறார்கள்? நாம் திருடர்களை பிடிப்பதற்கான சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். மோசடியால் திரட்டிய சொத்துக்களை கையகப்படுத்தக்கூடிய சட்டமூலத்தையும் தயாரித்திருக்கிறோம்.

எனவே அவர்கள் மக்களிடம் பொய் சொல்கிறார்கள். அவர்கள் கூறும் பொருளாதார முறை தவறானது.

மக்கள் மத்தியில் குரோதத்தை தூண்டிவிட்டே திசைக்காட்டிக்கு வாக்குகளை கோருகிறார்கள்.

அதிகாரத்தை மட்டும் இலக்கு வைத்து செயற்படுகின்றனர்.

வரியைக் குறைத்தால் என்ன நடக்கும் என்பதையே கோட்டாபய ராஜபக்‌சவின் ஆட்சியில் பார்த்தோம். 2020களில் நான் உண்மையை சொன்னதால் நான் தேசிய பட்டியலில் நாடாளுமன்றம் வரவேண்டிய நிலைமை உருவாகியது என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version