இந்த ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை விநியோகிக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு (Ministry of Education) தெரிவித்துள்ளது.
இதன்படி, 10,096 பாடசாலைகளை சேர்ந்த 460,000 இற்கு அதிகமான மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சீன அரசிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட குறித்த சீருடைகள், சுமார் 5,171 மில்லியன் ரூபாய் பெறுமதி உடையவை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
