வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் இலங்கைத்துறைக்கும்
இலங்கைத்துறை முகத்துவாரத்துக்கும் இடையில் உள்ள ஏரியில்
நடத்தப்பட்டு வந்த இழுவைப் பாதை சேவையினை உடனடியாக மீளத்
தொடங்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
வெருகல் பிரதேச ஒருங்கிணைப்பு
குழு கூட்டம் இன்று (17)இடம்பெற்றது.
இதன்போது தனது பிரேரனையை முன்வைத்த தொடர்ந்தும் சண்முகம் குகதாசன், ”வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் இன்மையால்
இங்கு வாழும் மக்கள் எரிபொருள் நிரப்புவதற்கு 20-25 கிலோமீட்டர் தூரம்
பயணிக்க வேண்டியுள்ளது.
பொருத்தமான இடம்
இந்த சிக்கலை தீர்க்கும் பொருட்டாக வெருகல் பிரதேச
செயலாளர் பிரிவில் பொருத்தமான இடத்தில் எரிபொருள் நிரப்பும்
நிலையத்தை வெருகல் பிரதேச சபை நிறுவ ஒப்புதல் கிடைக்க ஆவன செய்தல்.
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வாகனப் புகைப் பரிசோதனை
நிலையம் இன்மையால் இங்கு வாழும் மக்கள் வாகனங்களுக்கான புகைப் பரிசோதனை
மேற்கொள்வதற்காக 20-25 கிலோமீட்டர் தூரம்
பயணிக்க வேண்டியுள்ளது.
இதனை தீர்க்கும் பொருட்டாக வெருகல் பிரதேச
செயலாளர் பிரிவில் பொருத்தமான இடத்தில் வாகனப் புகைப் பரிசோதனை நிலையம்
ஒன்றை வெருகல் பிரதேச சபை நிறுவ ஆவன செய்தல்.
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் பிறப்பு, இறப்பு பதிவாளர் இல்லை. இதனால்
மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
எனவே, பதிவாளரை நியமிக்க விரைந்து
நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும்.
இலங்கைத்துறை முகத்துவாரம் புன்னையடிப் பாலம் அமைக்க விரைவான நடவடிக்கை
மேற்கொள்ளல்.
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலங்கைத்துறை முகத்துவாரம்
கிராமத்தில் மீன்பிடித்துறை நிறுவ ஆவன செய்ய வேண்டும்.
வெருகல் மற்றும் சேருவில பிரதேச செயலக பிரிவுகளின் எல்லைகளை
தெளிவாக அடையாளப்படுத்த ஆவன செய்தல். கல்லரிப்பில் இருந்து வெருகல் விவசாயிகளின் வயல்களுக்கு நீர் வழங்க ஆவன
செய்தல் வேண்டும்” என தெரிவித்தார்.
