அவுஸ்திரேலியாவில் (Australia) இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் தமக்கு தாமே தீ மூட்டிக்கொண்டு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
புத்தளத்தை (Puttalam) சேர்ந்த 23 வயதான மனோ யோகலிங்கம் (Mano Yogalingam) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் புகலிடம் கோரி நீண்டகாலமாக விசாவிற்கு காத்திருந்த நிலையில், மன உளைச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகலிடக்கொள்கை
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புகலிடக்கொள்கையே குறித்த இளைஞரின் மரணத்திற்கு காரணம் என தமிழ் அகதிகள் பேரவை குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கையில் நிலவிய போர் அச்சம் காரணமாக இந்தியாவில் (India) இருந்த படகு மூலம் அவர் தனது 11 ஆவது வயதில் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
இந்தநிலையில், பல ஆண்டுகள் கடந்த போதும் புகலிட கோரிக்கையை அங்கீகரிக்காத பட்சத்தில் இந்த முடிவை எடுத்துள்ளார்.
மேலும், பல இலங்கை அகதிகள் இவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளதாக தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.