Home முக்கியச் செய்திகள் வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர் – இன்டர்போல் விசாரணை

வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர் – இன்டர்போல் விசாரணை

0

இஸ்ரேலுக்கு (Israel) கட்டுமானத்துறை பணிக்காக சென்ற இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே இவ்வாறு கொலை செய்யபட்டுள்ளார்.

குறித்த சம்பவம் வியாழக்கிழமை (13) இரவு இடம்பெற்றதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமால் பண்டார தெரிவித்துள்ளார்.

இன்டர்போல் விசாரணை

ஆபிரிக்காவை சேர்ந்த ஒருவரால் குறித்த இலங்கையர், கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கொலையாளி இரண்டு மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் இஸ்ரேலிய காவல்துறையினர் இன்டர்போல் பிரிவுடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version