Home இலங்கை சமூகம் வெளிநாடொன்றிலிருந்து நாடு கடத்தப்பட்ட பெருமளவு இலங்கையர்

வெளிநாடொன்றிலிருந்து நாடு கடத்தப்பட்ட பெருமளவு இலங்கையர்

0

விசா இல்லாமல் குவைத்தில்(kuwait) சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 30 இலங்கையர்கள்(sri lankan) கொண்ட குழு இன்று (29) காலை நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.

 விசா இல்லாமல் குவைத்தில் தங்கியிருந்து அங்கு பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்த இந்த இலங்கையர்கள் அந்நாட்டின் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டு, அங்குள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய குழு 

 இந்தக் குழு குவைத்திலிருந்து ஷார்ஜாவிற்கு அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து இன்று(29) அதிகாலை 04.30 மணிக்கு ஏர் அரேபியா விமானம் G. 9-587 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.

பின்னர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் அவர்களுக்கு தேவையான நிதியை வழங்கிய பின்னர் அவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர்.

NO COMMENTS

Exit mobile version