Home இலங்கை சமூகம் விவசாயத் தொழில்துறைக்கு இஸ்ரேல் பறக்கவுள்ள இலங்கையர்கள்

விவசாயத் தொழில்துறைக்கு இஸ்ரேல் பறக்கவுள்ள இலங்கையர்கள்

0

இஸ்ரேலின் (Israel) விவசாயத் தொழில்துறைக்கு இலங்கையர்களை உள்வாங்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இஸ்ரேலில் விவசாயத் தொழிற்துறையில் பணியாற்றக் கூடிய 95 பேர் இதன் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தொழிலுக்காக இஸ்ரேலுக்குச் செல்லும் 12 பேருக்கு நேற்றைய தினம் (10.04.2025) விமான பயணச் சீட்டுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபர்கள் எதிர்வரும் 20ஆம் திகதி இஸ்ரேலுக்குச் செல்லவுள்ளதாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் வேலைவாய்ப்பு

இதேவேளை, இஸ்ரேல் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஹோட்டல் துறை தொடர்பான வேலைகளுக்கு இலங்கை இளைஞர்கள் குழு ஒன்று முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹோட்டல் வீட்டு பராமரிப்பு வேலைகளுக்குச் சென்ற முதல் குழுவில் இளம் பெண்கள் உட்பட 103 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த குழுவினர் கடந்த 7ஆம் திகதி இஸ்ரேலுக்குப் புறப்பட்டதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version