Home உலகம் விமர்சனங்களுக்கு மத்தியில் கனடா பிரதமரை வாழ்த்திய ட்ரம்ப்

விமர்சனங்களுக்கு மத்தியில் கனடா பிரதமரை வாழ்த்திய ட்ரம்ப்

0

கனடா (canada)பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கானிக்கு(mark carney) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்ற பின், அண்டை நாடுகளுக்கான இறக்குமதி வரியை அதிகரித்து அறிவித்தார். இதனால் அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் இடையிலான உறவுகள் மோசம் அடைந்தது.

கனடாவை 51வது மாநிலமாக மாற்றுவோம் என ட்ரம்ப் கூறியது விமர்சனங்களை ஏற்டுத்தியது.

ட்ரம்ப் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த மார்க் கானி

இதன் பிறகு தற்போது பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற, மார்க் கார்னி ட்ரம்ப் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.

அவர், ”நான் பல மாதங்களாக எச்சரித்து வருவது போல அமெரிக்கா நமது நிலம், நீரை விரும்புகிறது. அமெரிக்கா நம்மை சொந்தமாக்கி கொள்ள விரும்புகிறது. அது ஒரு போதும் நடக்காது” என மார்க் கார்னி தெரிவித்தார்.

மார்க் கானிக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வாழ்த்து

இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலுக்கு மத்தியில், கனடா பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கானிக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘ஜனாதிபதி ட்ரம்ப் உடன் மார்க் கார்னி பேசினார். பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இரு நாட்டு தலைவர்களும் எதிர்காலத்தில் நேரில் சந்திக்க ஒப்புக்கொண்டனர்” என கனடா பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

NO COMMENTS

Exit mobile version