Home இலங்கை அரசியல் அடுத்த மாதம் வியட்நாம் பறக்கவுள்ள ஜனாதிபதி அநுர

அடுத்த மாதம் வியட்நாம் பறக்கவுள்ள ஜனாதிபதி அநுர

0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி வியட்நாம் (Vietnam) செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

சர்வதேச வெசாக் தினம்

2025 சர்வதேச வெசாக் தினம் ‘உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பௌத்த நுண்ணறிவு’ என்ற தொணிப்பொருளில் கொண்டாடப்படுகின்றது.

ஹோ சி மின் நகரில் அமைந்துள்ள வியட்நாம் பௌத்த நிலையத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தினம் மற்றும் சர்வதேச அறிவியல் மாநாட்டில் சுமார் 80 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிகழ்வுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சில நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version