Home முக்கியச் செய்திகள் ஈரான் மீதான தாக்குதலின் எதிரொலி : இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு

ஈரான் மீதான தாக்குதலின் எதிரொலி : இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு

0

இஸ்ரேலுக்கான (israel) இலங்கைத்(sri lanka) தூதுவர் நிமல் பண்டார, இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பயணத்தை குறைக்குமாறும் பணியிடங்களில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

ஈரானில் (iran) தேர்ந்தெடுக்கப்பட்ட பல இடங்களில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியதையடுத்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தூதுவர் தெரிவித்தார்.

தாக்குதல்கள் குறித்து அவதானம் தேவை

இந்நிலைமை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க கூடும் என அவதானிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் ஆளில்லா விமான தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் எனவும் தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார். 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening

Source: https://ibctamil.com/article/sri-lankans-in-israel-are-told-to-minimize-travel-1729955546?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version