மியான்மரின் மீவாடியில் சிக்கித் தவிக்கும் 15 இலங்கையர்கள் நாளை 6ஆம்
திகதியன்று மீட்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை வெளியுறவு அமைச்சரின் நேரடி அறிவுறுத்தலின் கீழ் இந்த நடவடிக்கை
மேற்கொள்ளப்படுகிறது,
இந்த பணியை மேற்பார்வையிட மியான்மர் தூதரகம் இன்று தாய்லாந்தின் மே சோட்டுக்கு
ஒரு அதிகாரியை அனுப்பியுள்ளது.
சிக்கித்தவிக்கும் இலங்கையர்
மீட்கப்படுவோருக்கு விமான அனுமதிச்சீட்டுக்கள் மற்றும் உள்ளூர் போக்குவரத்து
உள்ளிட்ட முழு மூலோபாய ஆதரவை வழங்க சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் தாய்லாந்து
கிளை முன்வந்துள்ளது.
தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் தாய் குடிவரவு அதிகாரிகளுடன்
இணைந்து இந்த ஏற்பாடுகள் உன்னிப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னரும் இலங்கையர்கள் பலர், மியான்மார் மீவாடியில் அமைந்துள்ள
சட்டவிரோத இணையக்குற்ற முகாம்களில் இருந்து மீட்கப்பட்டு, தாயகத்துக்கு
அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
