Home இலங்கை அரசியல் சர்ச்சைக்குரிய மன்னார் காற்றாலை திட்டம் – ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு

சர்ச்சைக்குரிய மன்னார் காற்றாலை திட்டம் – ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு

0

மன்னார் (Mannar) காற்றாலை செயற்திட்டம் குறித்து அப்பிரதேச மக்கள் காட்டும் பலத்த எதிர்ப்பை முன்னிட்டு அத்திட்டம் ஒருமாத காலத்திற்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட தேசிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்கள் (NPP) மன்னார் காற்றாலை மற்றும் கனிய மண் அகழ்வு தொடர்பில் ஜனாதிபதியோடு நடந்த கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பு நேற்றைய தினம் (13) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றிருந்தது.

தற்காலிகமாக இடை நிறுத்தம்

அங்கு நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து, காற்றாலை கனிய மணல் அகழ்வு திட்டம் மன்னார் தீவில் ஒரு மாதத்திற்கு தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்யப்பட்டு, காற்றாலையோடு தொடர்புபட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக விஷேட குழுவொன்றை நியமிக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அத்துடன் கனிய மணல் தொடர்பாக மீண்டும் சூழலியல் ஆய்வு செய்யப்பட்டு மக்களிற்கு உகந்த முடிவு வழங்கப்படும் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது

இந்த சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version