Home இலங்கை அரசியல் 60 இற்கும் மேற்பட்ட படுகொலைக்கு டக்ளஸ் உடந்தை: ஆதாரத்துடன் முகத்திரையை கிழித்த சிறீதரன்

60 இற்கும் மேற்பட்ட படுகொலைக்கு டக்ளஸ் உடந்தை: ஆதாரத்துடன் முகத்திரையை கிழித்த சிறீதரன்

0

60 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் கொலைகளுக்கு டக்ளஸ் தேவானந்தாவும் (Douglas Devananda) உடந்தையானவர் எனவும் அவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (17) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிக்கையில், “மண்டைதீவு, மன்கும்பான் மற்றும் நல்லைப்பிட்டி கொலைகள் மற்றும் புதைகுழி விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் முறையாக நடத்தப்பட வேண்டும்.

மண்டைதீவு, மன்கும்பான் மற்றும் நல்லைப்பிட்டி பகுதியில் மக்கள் அழைத்து செல்லப்பட்டு வைக்கப்பட்டிருந்த போது மக்கள் அது குறித்து அப்போதைய இராணுவத்தின் துணை ஆயுத குழுவாக இருந்த டக்ளசிடம் மக்கள் முறையிட்டுள்ளனர்.

இருப்பினும் அது குறித்து கணக்கில் எடுக்காத டக்ளசினால் அங்கு மக்கள் கொன்று புதைக்கப்பட்டனர் ஆகையால் இது தொடர்பில் டக்ளசிடமும் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் மக்களின் படுகொலை விவகாரம் மற்றும் சித்துப்பாத்தி மயானத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் அவர் சபையில் கேள்வி எழுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

https://www.youtube.com/embed/QzHaWKsCZe4

NO COMMENTS

Exit mobile version