இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், யாழ் தேர்தல் மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம்
சிறீதரன் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினரின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தில் நேற்றைய தினம் (29.10.2025) மாலை 3 மணிக்கு குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்றில் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான பிரேரணைகள், விவாதங்களின் போது உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகள், விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
பிரதேச சபைத் தலைவர்கள்
தவிசாளர்களினால் ஆரோக்கியமான கருத்துக்களை தெரிவித்ததுடன் ஒவ்வொரு விடயங்களையும் தனித்தனியாக ஆராய்ந்து உரிய விடயங்களை கேட்டறிந்து கொண்டதுடன் எதிர்கால நடவடிக்கைக்கான விடயங்கள் தொடர்பாகவும் ஒவ்வொரு பிரதேச சபைகளின் தலைவர்களிடமிருந்தும் விபரங்களை பெற்றுக்கொண்டார்.
குறித்த கலந்துரையாடல்கள் மிகவும் பயனுள்ளதாகவும், ஆரோக்கியமாக அமைந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் இவ்வாறான சந்திப்புக்கள், கலந்துரையாடல்களை மேற்கொண்டு உள்ளுராட்சி மன்ற செயற்பாடுகளையும் தமது செயற்பாடுகளையும் வெற்றிகரமாக முன்னெடுக்க உதவியாக இது அமையும் என சிறீதரன் எம்.பி மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
